நெடுந்தீவில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறி
நெடுந்தீவு பிரதேச இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறியினை நெடுந்தீவு பிரதேசத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி 18 நாட்களை கொண்டதாக உள்ளதுடன் இதன்போது பங்குபற்ற விரும்புவர்கள் தமது விபரங்களை எதிர்வரும் மே 06 திகதிக்கு முன்னர் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் பதிவு செய்யுமாறு நெடுந்தீவு இளைஞர் சம்மேளனத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.