புங்குடுதீவில் மாட்டிய பசு கொள்ளையர்கள்
யாழ்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் நீண்ட காலமாக பசுகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு இறைச்சியாக்கம் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பசுவொன்றினை மோட்டார்சைக்கிளில் ( NP GQ 1025 ) கடத்தி இறைச்சியாக்கும் நோக்கில் கொண்டுசெல்லும்போது குறித்த பிரதேச இளைஞர்களால் மறிக்கப்பட்டு இக்காணொளி பதிவு செய்ப்பட்டுள்ளது .
குறித்த சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதித்துறையினர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பிரதேச இளைஞர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.