பல லட்ச செலவில் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்ட நுழைவாயில்
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த அமரர் . சின்னத்துரை வசந்தலெட்சுமி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்டமான நுழைவாயில் உருவாக்கப்பட்டதோடு நடைபாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டுள்ளதோடு சின்னத்துரை குடும்பத்தின் அனுசரணையில் பாடசாலையிலும் , அதன் மைதானத்திலும் பயன்தரு மரக்கன்றுகளும் , பூமரங்களும் நடுகை செய்யப்பட்டன . பாடசாலையின் அதிபர் கி. விநோதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக தீவக கல்வி வலய பணிப்பாளர் தி. ஞானசுந்தரன் , சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் , புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் பரிபாலனசபை தலைவர் செ. யுகேந்திரன் , சமூக சேவகர் வேலாயுதன் சிவசாமி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் .