மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.