இன்றைய நாள் எப்படி – 17 மே 2024

17/05/2024  வெள்ளிக்கிழமை 

1)மேஷம்:-
புதிய கூட்டாளிகளை சேர்ப்பது பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சிறு கடன் தொல்லைகள் உருவாகலாம்.

2)ரிஷபம் :-
பணியாளர்களின் ஒத்துழைப்பினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

3)மிதுனம்:-
கூட்டுத் தொழில் அதிக லாபம் பெற கூட்டாளிகளுடன் ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

4)கடகம்:-
கூட்டுத் தொழிலில் திடீர் போட்டிகள் உருவாக்கி வியாபாரத்தை பாதிக்கலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளிப்பீர்கள். சுப காரியங்கள் நடைபெற முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

5)சிம்மம்:-
எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும். சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் காணப்படும் .

6)கன்னி:-
உங்கள் திறமையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம்  உண்டு. குடும்பத்தில் மன வேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும்.

7)துலாம்:-
கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு சேமிப்பு பெருகும்.

8)விருச்சிகம்:-
பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் கிடைக்கும்.

9)தனுசு:-
சொந்தத் தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் பணிச்சுமை அதிகரிக்கும். கூட்டு தொழில் நன்றாக நடைபெறும்.

10)மகரம்:-
கூட்டு தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் எதிர்வாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் மனதிற்கு பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும்.

11)கும்பம்:-
பெண்களுக்கு தாய் வழி சொத்துக்கள் வந்து சேரலாம். கலைஞர்கள் பணியாற்றும்போது கவனமாக இருங்கள். இரவில் நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

12)மீனம்:-
கூட்டுத் தொழில் நன்றாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றக்கூடும். பழைய கடன்காரர்களின் மறைமுக தொல்லை இருக்கும்.