15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளான 15வது ஆண்டு நினைவு நாளினையொட்டி 21ம் நூற்றாண்டின் அதி உச்ச இனவழிப்பு எனும் தொணிப் பொருளில் பிரித்தானிய தமிழர்களால் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் பேரணியோடு கூடிய நீதி போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இன்று இடம் பெற்ற குறித்த போராட்டம் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் பிற்பகல் 3 மணி அளவில் நீதி போராட்டமாக ஆரம்பமாகி தொடர்ச்சியாக வெளிய விவகார அமைச்சகம் முன்பாக பேரணியாக சென்று பிரதமர் வதிவிடத்திக்கு முன்பாக தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
குறித்த நீதிப் போராட்ட நிகழ்வினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததோடு பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.