ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான கண்டுபிடிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் கூறுகையில் நிலைமை “நல்லதாக” இல்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளான இடத்தை “சில நிமிடங்களில்” அடைவார்கள் என்று ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் Pirhossein Kolivand தெரிவித்துள்ளார்.
அவசர தரையிறக்கம் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளானது.
கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.