இன்றைய நாள் எப்படி – 22 மே 2024

 22/05/2024 புதன்கிழமை 

1)மேஷம்:-
வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

2)ரிஷபம் :-
நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இது நாள் வரை தள்ளிப்போன இடமாற்றம் பதவி உயர்வுகளை பெற்று மகிழ்வர்.

3)மிதுனம்:-
கையில் எடுக்கும் காரியங்களில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் உடனடியாக நன்மையை எதிர்பார்க்க இயலாது.

4)கடகம்:-
எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நன்மை தரும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

5)சிம்மம்:-
உங்களின் வேகமும் விவேகமும் வாழ்வில் முன்னேற ஒரு துணையாக இருக்கும். உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பதவி உயர்வு பெற ஏற்ற தருணம் இது.

6)கன்னி:-
நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நிறைவேறும். உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பதவி உயர்வு போன்றவற்றைப் பெற முயற்சி செய்தால் அது வெற்றி கிடைக்கும்.

7)துலாம்:-
எதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். வீடு ,வாகனம் வாங்குவதிலும் வீடு கட்டுவதிலும் மிகுந்த கவனமாக இருங்கள்.

8)விருச்சிகம்:-
முன்னெடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் பதவி ,உயர்வு பெற்று மகிழ்வார்கள்.

9)தனுசு:-
கூடுமானவரை நன்மையான பலன்களையே எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தர்களுக்கு இடம் மாற்றம் பதவி உயர்வு கூடும் .

10)மகரம்:-
வார்த்தைகளில் கவனமாக இருங்கள். இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் பதவி உயர்வு போன்ற நற்பலன்களை பெறுவர்.

11)கும்பம்:-
புதுப்புது பிரச்சினைகள் தோன்றும் இருந்தாலும் உங்களுடைய யூக்திகளால் அந்த பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள்.

12)மீனம்:-
எதிர்ப்புகள் உண்டாகும். இருந்த போதிலும் உங்கள் முயற்சியால் நல்ல பலன்கள் ஏற்படும். மனைவி வழி உறவுகளில் ஆதரவு கிடைக்கும்.