சூழகம் அனுசரணையில் புத்தாண்டு விளையாட்டு விழா
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் நிதி அனுசரணையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஞா. அமலஜான் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர்(பதில்) நிவேதிகா கேதீசன் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் வி. ருத்திரன் கலந்துகொண்டிருந்தார் .
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது .