காத்தான்குடியில் பாலஸ்தீன விடுதலை மாநாடு
“வி ஆர் வன்” (We are One) அமைப்பினரால் மாபெரும் பாலஸ்தீன விடுதலை மாநாடு ஒன்று நடாத்தப்படவுள்ளது.
இதற்கமைய காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு முன்னெடுக்கவுள்ளனர்.
இதன்போது சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தவுள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன் அமைப்பினர் தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் தலைவரான சமூக ஆர்வலர் சுரேன், அமைப்பின் ஊடக பேச்சாளர் ரஸ்மின், உபதலைவர் சஜீர் மௌலவி மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி மௌலவி ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர்.