கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜப்பானின் நரிட்டா, டுபாய் மற்றும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் இன்று பிற்பகல் கட்டநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அதற்கமைய, குறித்த விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சென்னை, மாலே மற்றும் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த மேலும் 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.