மரண அறிவித்தல்
திருமதி சாந்தி சவுந்தரக்குமார்
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி சவுந்தரக்குமார் அவர்கள் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வியும், பேரம்பலம், காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
சவுந்தரக்குமார்(நில அளவையாளர் இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜன், சித்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராஜா(அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன்(கனடா), கிருபாகரன்(கனடா), சர்வானந்தன்(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபூரணி(மீனா), சாந்தரூபி(வசந்தி), உமா, ராகினி, லக்ஷி, சவுந்தரராஜன்- பாமா(லண்டன்), சகுந்தலாதேவி- அருள்பரன்(கனடா), சவுந்தரநாதன்- யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
ரஜீவ், ஜெனனி, யுதீஷ், வாகீஷ், ஷோபிகா, சகானா, நிவிதா, லவீஷ் ஆகியோரின் ஆசை அத்தையும்,
ஐங்கரன், செந்தூரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
அபிராமி, அருண் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெனனி, ரேவதி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்