1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன் Aaron லோகன்
கனடாவின் பிரபல தொழிலதிபரும் அரசியல் கட்சி ஆதரவாளருமாகிய திரு. திருமதி லோகன் இராசையா அவர்களின் செல்வப் புதல்வன் Aaron Logan இன் முதலாவது பிறந்ததின வைபவம் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் 3840 Finch Av East இல் அமைந்துள்ள Metropolitan Center இல் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
Aaron Logan இன் பிறந்ததின வைபவத்தில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆசீர்வதித்தனர்.
பிறந்தநாளில் சின்னம் சிறார்களை மகிழ்விக்கும் சிறுவர்களுக்கான போட்டிகள், மாஜாயால வித்தைகள், இசைக்கதிரைகள், நடனம் போன்றவையுடன் ஸ்பெயின் நாட்டவரின் நடனங்களுடன் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளாலும் விழா களை கட்டியது.
இறுதியில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
Aaron Logan பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ தமிழ் சி.என்.என் குடும்பம் வாழ்த்துகின்றது.
தகவல், படங்கள்: சிறி ராஜன்