மரண அறிவித்தல்
LION .கந்தசாமி சிவபாலன் MJF,J.P (WI)
LION .கந்தசாமி சிவபாலன் MJF,J.P (WI) (தேசபந்து ,தேசமாண்ய,லங்காபுத்திர,விஸ்வகீர்த்தி) (ஓய்வுநிலை இலங்கை வங்கி சிரேஸ்ட முகாமையாளர்)
கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும் ,இல .14,கரப்பன்காடு ,வவுனியா என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாலன் 11.01.2016 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பார்வதிப்பிள்ளை,தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை-சிவயோகம் தம்பதியரின் பாசமிகு மருமகனும் ,நவநிதியின் (ஓய்வு நிலை தொழில் உத்தியோகத்தர் பாசமிகு கணவரும்,சிற்பரன் (பொறியியலாளர் – லண்டன் )நிமலன் (Merchant Nevy Officier) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,தயாநிதி ,தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ,சாருஜன் ,அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ,திரு.திருமதி தணிகாசலம் (கவிதா ஸ்டோர்ஸ் பஸ் நிலையம் வவுனியா),திரு.திருமதி சண்முகராஜா ஆகியோரின் சம்பந்தியும் காலஞ்சென்ற சிவானந்தம் (முன்னாள் பிரதி அதிபர் ஹாட்லிக் கல்லூரி-பருத்தித்துறை),சிவரூபன் (ஜெர்மனி) ஆகியோரின் சகோதரரும் ,ஜெயலக்ஷ்மி,சியாமினி ஆகியோரின் மைத்துனரும் ,கவிதன்,ஜீவிதன் (லண்டன்),நிலானி (மருத்துவபீடம்-கொழும்பு ),சுஜீவன்,சஞ்சீவன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 13.01.2016 புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல.14 கரப்பன்காடு,
வவுனியா
தகவல் :குடும்பத்தினர்.