மரண அறிவித்தல்
திருமதி நாகரட்ணம் கதிரித்தம்பி (பெரியம்மா)
யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், தற்போது நாகலிங்கம் வீதி, கொக்குவில் மேற்கில் வசித்தவருமாகிய திருமதி நாகரட்ணம் கதிரித்தம்பி நேற்று முன்தினம் 01.03.2016 செவ்வாய்க்கிழமை தனது 105 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் செல்லப்பா (ஸ்தாபகர், தலைமை ஆசிரியர் – கொக்குவில் இந்துக்கல்லூரி), நாகம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கதிரித்தம்பியின் (லிகிதர் – யாழ் போதனா வைத்தியசாலை) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ஞானம்மா, ஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலட்சுமி (கனடா), சாந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரஞ்சன் (சிங்கப்பூர்), சஞ்சுளா (கனடா), லக்ஸ்மன் (USA), கிரிஷாந்தி (கனடா), சயந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
இந்திராதேவி (சாவகச்சேரி), வனிதாதேவி (சாவகச்சேரி), ஞானராஜன் (ஜேர்மனி), ஞானச்சந்திரன் (கருணாலயம்), ஞானரஞ்சினி (ஜேர்மனி), ஞானேஸ்வரி (கொழும்பு), ஞானசீலன் (சுவிஸ்), ஞானபூபதி (பாரதி இன்டஸ்றீஸ் – கொக்குவில்), சொர்ணராஜா (லண்டன்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
புவனேஸ்வரன் (லண்டன்), றஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 06.03.2016 ஞாயிற்றுகிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் க.ஞானச்சந்திரன்
(ஞானி)
(கருணாலயம்)