மரண அறிவித்தல்
தம்பு மாணிக்கவாசகர்
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு மாணிக்கவாசகர் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்காமர்(லண்டன்), லோகேஸ்வரன்(லண்டன்), பிரகலாதன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயந்தி(லண்டன்), யோகசாந்தினி(லண்டன்), சாமினி(லண்டன்), லசந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளசிகன், கீர்த்திகன், சயந்தன், அனுஜன், மாதங்கினி, அபிராமி, ஹரிணி, மகல்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 09:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.