மரண அறிவித்தல்
நாகலிங்கம் பாலேந்திரசிங்கம் (சின்னன்)
வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், இல.104, புங்கன் குளம் வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னன் என அன்பாக அழைக்கப்பட்ட நாகலிங்கம் பாலேந்திரசிங்கம் 23.11.2016 புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும், தனபாலசிங்கம் (UK), புவனராணி (UK), இந்திராணி (அரியாலை), ஜெயராஜசிங்கம்(நாவலப்பிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், தவமணி (UK), அன்றூ (முன்னாள் வடபிராந்திய போக்குவரத்துசபை உத்தியோகத்தர்), ஞானேஸ்வரி (நாவலப்பிட்டி), ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ரவி(UK), கீதா(UK), டிலானி அனுபாமா (நெதர்லாந்து), அஜித் சஞ்ஜீவ்(பிரதேச செயலகம், நெடுந்தீவு), சிறாணி அனுஷியா (மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2016) வெள்ளிக்கிழமை இல.104, புங்கன் குளம்வீதியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.