மரண அறிவித்தல்

உத்தண்டன் பிள்ளை முத்துசாமி (J.P)(உரிமையாளர் ராஜேஸ்வரன் ஸ்டோர்ஸ், பொகவந்தலாவ)

தோற்றம்: 24.01.1943   -   மறைவு: 26.11.2016

 

தமிழ்நாடு,திருச்சி மாவட்டம், துறையூர், ஏரகுடி, மெய்யம்பட்டி கிராமம், போக்கவந்தலாவையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உத்தண்டன் பிள்ளை முத்துசாமி அவர்கள் (26.11.2016) சனிக்கிழமை இறைப்பாதம் அடைந்தார்.

அன்னார் S.K.T  உத்தண்டன் பிள்ளை – செல்லம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும் இராஜேஸ்வரியின் அருமைக்கானவரும் உதயகுமார் (Nirosh LTD U.K), ஜெயப்பிரபா, சீதஜெயந்தி, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ரோஷினி (U.K), மகேந்திரன் (Colonial Hardware), நந்தகுமார்(Jayamma Stores), சரவணன் (Winsley Estate),ஆகியோரின் மாமனாரும் திருமதி ந.சந்திரமதியின் அன்பு அண்ணாவும் ம.நல்லதம்பி (N.P.R trading), பரடைஸ் ஸ்ரீ மகா காளியம்மன், திருக்குயில் பிரதம அறங்காவலர் மைத்துனரும் யாழினி, தாரிணி(U.K), ஜனனி(U.K), ஜயனி, ஆகாஷினி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் லிவேந்திரன், கௌசல்யா, துஷாந்த், கிரிஷா, நிரோஷ், ரேஷ்மிதா, கனிஷ்கர், கிரேதீஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் திரு.திருமதி இராமலிங்கம், திரு.திருமதி நடராஜா (Colonial), காலஞ்சென்ற திரு.சோழன், திருமதி பொறக்கிளி, திரு.திருமதி செல்லச்சாமி, வேலம்மாள் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை A.F ரேமன் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28.11.2016 இன்று மாலை 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
A.F ரேமன் மலர்ச்சாலையில்
திகதி : 28.11.2016
இடம் : பொரளை
தொடர்புகளுக்கு
மகேந்திர
தொலைபேசி : 0777760132