மரண அறிவித்தல்
திருமதி கோபாலப்பிள்ளை நாகபூசணி
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி திருநகரை வதிவிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை நாகபூசணி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சிவபாலன், பேரின்பநாயகி, செல்வநாயகி(லண்டன்), சிவனேசன்(பிரான்ஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), மகேஸ்வரன், செல்வராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிற்றம்பலம், கிருஸ்ணபிள்ளை, மற்றும் நீலாம்பிகை, குணபூவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற லலிதாம்பிகை, நாகேந்திரராசா, ஞானேஸ்வரன்(லண்டன்), ராதை(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), திருஞானசம்பந்தர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சரஸ்வதி, சொரூபராணி, கனகலிங்கம், துரைராசா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜீவரூபன், சாரங்கன், பவித்திரா, சுபாஸ்கரன், விபூசன், சாஜினி, திசாயினி, சதுசா(லண்டன்), றோசன்(பிரான்ஸ்), பார்கவி(பிரான்ஸ்), கிருத்திகா(பிரான்ஸ்), சந்தோஸ்(பிரான்ஸ்), சதுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |