மரண அறிவித்தல்
திருமதி தையலாம்பாள் உருத்திராபதி
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடடமாகவும் கொண்ட திருமதி தையலாம்பாள் உருத்திராபதி நேற்று (27.09.2017) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – அன்னம் தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற உருத்திராபதியின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வயலின் வித்துவான் இராதாகிருஷ்னன் மற்றும் பாலகிருஷ்ணன் (நாதஸ்வரம்) , ஸ்ரீரஞ்சன் (ஆஸ்திரேலியா) , கோகுலஸ்துவனி (கொழும்பு ), V.R .கிருஷ்ணன் (சந்தாண கிருஷ்ணன் வயலின் ஓமான்) ஆகியோரின் அன்பு தாயாரும் வாசுகி, சுதாதேவி, காலஞ்சென்ற மிருதங்க வித்துவான் சந்தாணகிருஷ்ணன் மற்றும் ராமானந்தம், கலாதேவி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.09.2017) வியாழக்கிழமை பி.ப.2.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இணுவில், காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
தகவல்:
குடும்பத்தினர்.
கந்தசாமி கோவிலடி,
இணுவில் மேற்கு ,
இணுவில்.