1 ம் ஆண்டு நினைவஞ்சலி

மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன்

தோற்றம்: 11.05.1948   -   மறைவு: 01.10.2016

 

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் வடக்கு மாகாணசபை முல்லை மாவட்ட உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!

விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 01.10.2017
இடம் : இல்லத்தில்
தொடர்புகளுக்கு
பீற்றர் இளஞ்செழியன்
கைப்பேசி : 0772045444