மரண அறிவித்தல்
உயர் திரு.லயன் Dr.மூத்ததம்பி கனகரெத்தினம் (J.P ) (B.Com(cey ), IB SLM , AAT, முன்னாள் மக்கள் வாங்கி முகாமையாளர் )
செட்டிப்பாளையத்தினை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, திருமலை வீதி,513/19, லயன்ஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உயர் திரு.லயன் Dr.மூத்ததம்பி கனகரெத்தினம் அவர்கள் 21.11.2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மூத்ததம்பி மற்றும் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கோணாமலை, தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
காஞ்சனாதேவி (ஆசிரியை, மட் / மட்டிக்கழி தமிழ் வித்தியாலயம் )அவர்களின் அன்பு கணவரும்,
பிரசன்னா (போதனா வைத்தியசாலை – மட்டக்களப்பு ), சிந்துஜா (மருத்துவபீட மாணவி, ரஸ்யா), மயூரன்(பிரபல ஆசிரியர்- இரசாயனவியல்), தனுசியா (மருத்துவபீடம், பங்களாதேஷ் ), அபிநயா(மட் /வின்சன்ட் உ/பா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வைத்திய கலாநிதி உபநிஸாவின் மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிரெட்ணம் ( இ.மி.ச பொறுப்பாளர் ), அழகேஸ்வரி, குணமணி, சோதிலெட்சுமி, மலர்தேவி (ஆசிரியர், மேட்/பேட்/செட்டிபாளையம் ம.வி ) கோபாலரெத்தினம் ( மேலதிக பணிப்பாளர் நாயகம் , முகாமைத்துவ சேவை திணைக்களம், நிதி அமைச்சு ), காலன்சென்ற யோகரெத்தினம் ( அலுவலக உத்தோயோகத்தர் )ஆகியோரின் அன்பு சகோதரரும்,
கனகலெட்சுமி , சியாமிளா ( முன்னாள் பிரதி முகாமையாளர்- மக்கள் வங்கி, மட்டக்களப்பு ), பூங்கோதை ( லண்டன் ), விமலா ( ஆசிரியை, மட் /கர்ப்பலா முஸ்லீம் பா/ஆரையம்பதி ) , மணிமேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
சிவேஷ் அவர்களின் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23.11.2017 நாளை வியாழக்கிழமை பி.ப.3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
513/19,லயன்ஸ் வீதி, மட்டக்களப்பு.