மரண அறிவித்தல்
திருமதி கற்பகம் கதிரேசு
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கற்பகம் கதிரேசு அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(கிருடியர்) தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகெளரி(இலங்கை), ஞானகெளரி(இலங்கை), றஞ்சிதகெளரி(கனடா), ரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சாந்தகெளரி மற்றும் வசந்தகெளரி(பிரித்தானியா), ஜெயந்தி(சுவிஸ்), யாழினி(கனடா), யாமினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம், தாமோதரம்பிள்ளை, மற்றும் நாகரத்தினம்(கனடா), பாக்கியரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(இலங்கை), விஜயராஜன்(ரகு- கனடா), சசிதா(கனடா), நித்தியதர்மகுமார்(கண்ணன்- பிரித்தானியா), ஜெயராஜ்(சுவிஸ்), பாலரூபன்(கனடா), லிங்கராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, செல்லத்துரை, செல்லம்மா, கணபதிப்பிள்ளை, கந்தையா, கார்த்திகேசு, சிவபாக்கியம், விசுவலிங்கம், நாராணபிள்ளை, சிவகாமி, இராசரெத்தினம், பரமநாதி மற்றும் நாகேஸ்வரி(கனடா), தங்கம்மா(நியூசிலாந்து), இரத்தினசபாபதி(கனடா), சிவபாதசேகரம்(மணியான்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மிளா விஜயநாதன், நிஷான் கஸ்தூரி, நிரோஷன், விஷாந், விஜே பிரியா, காலஞ்சென்ற ராகுலன் மற்றும் தமியானோ, ஸ் ரீபன், திவ்யா, தனியா, துவாரகன், யாதவன், சாயிராஜ், சாயிநாத், கோபிகா, அனுஜன், அல்வின், சஹானா, சாதனா, அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இளநிலா, நிலானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்