மரண அறிவித்தல்
திருமதி .வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை வேலாயுதன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
குகதாஸ்(இலங்கை), ராகினி(அவுஸ்திரேலியா), சிராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன் மற்றும் ஞானம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரஜி கோகிலா(இலங்கை), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), விக்னகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி(ஐக்கிய அமெரிக்கா), சிவகாமி(இலங்கை), கோகுலன்(அவுஸ்திரேலியா), நிருஷா(பிரித்தானியா), தனுசா(பிரித்தானியா), குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மஹியல்(இலங்கை), மகீத்தா(இலங்கை), மீலா(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.