மரண அறிவித்தல்
திரு.வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம்
BK Balasubramaniam (ஓய்வுபெற்ற முன்னாள் ஹாட்லி கல்லூரி ஆசிரியர்) கல்லூரி வீதி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வெஸ்லி ஒழுங்கை கல்லூரி வீதியை, வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று (31.01.2020) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – செல்லாச்சி தம்பதியரின் ஏக புத்திரனும் காலஞ்சென்ற மாணிக்கத்தின் அன்புச் சகோதரனும் துரைசாமி – வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் தவமணியின் அன்புக் கணவரும் தவபாலனின் (லண்டன்) பாசமிகு தந்தையும் விமலகுமாரியின் (லண்டன்) அன்பு மாமனாரும் திவ்யாவின் (லண்டன்) பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02.02.2020 (ஞாயிற்றுக் கிழமை) காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
வெஸ்லி ஒழுங்கை,
தகவல்: தவபாலன் (மகன்) கல்லூரி விதி, பருத்தித்துறை