31ம் நாள் நினைவஞ்சலி
திருமதி கார்த்திகேசு இராசு
நன்றி நவிலல்
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புதுக்குளம், பிரித்தானியா, மன்னார் சின்னக்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இராசு அவர்களின் நன்றி நவிலல்.
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க
வேரென இருந்தீர்களே நீங்கள்
மாயப் புயல் வடிவில் காலனவன் உயிர்பறிக்க
சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன
காலனவன் கணக்கில் தப்பென்று சொல்லுவதா
கண்களை குளமாக்க விதி செய்த விளையாட்டா
சோகத்தில் உன் உறவுகள் துடிதுடிக்க
சொல்லாமல் சென்றாயோ
உமை இங்கு இழந்துவிட்டோம்
இனி எங்கு காண்போமோ?
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
31ம் நாள் நினைவஞ்சலி
February 05, 2020 at 08:00
அன்னாரின் இல்ல
இங்ஙனம்
குடும்பத்தினர்+41791527611