மரண அறிவித்தல்
திரு முருகானந்தம் மிகிந்தன்
புங்குடுதீவு 5 ஆம் வட்டாரம் கேரதீவைப் பிறப்பிடமாகவும். ஓட்டுமடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகானந்தம் மிகிந்தன் நேற்று (22.02.2020) சனிக்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் முருகானந்தம் – இந்துராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மஞ்சுளா (ஜேர்மனி). சிந்துஜா, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லோகேஸ்வரனின் (ஜேர்மனி) அன்பு மைத்துனரும், திசாணியின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற சிவகுரு மற்றும் பரிமளம், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அமிர்தம்மா ஆகியோரின் அன்புக்குரிய பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மானிப்பாய் வீதி. ஓட்டுமடத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இன்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் கேரதீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :- குடும்பத்தினர்
முருகானந்தம்.