O/L பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பெறுபேறுகளை திட்டமிட்டபடி வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.