இளமைக்குத் தேவை யோகா ! அடித்து கூறுகிறார் சன்னி லியோன் !
சருமம் பளபளப்புடனும் இளமையாகவும் இருக்க காரணம் தினமும் ஒரு மணிநேரம் மேற்கொள்ளும் யோகாதான் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் எங்கு சென்றாலும் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்து செல்கிறார். அடிக்கடி தண்ணீர் அருந்துவதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார். முறையான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கும் சன்னி, உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவரது சருமம் பளபளப்புடன் இளமையாக இருக்க யோகா செய்வதற்கு தினமும் ஒரு மணி நேரம் செலவழிக்கிறார்.
தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சிகளில் தொடங்கி தசைகளை வலுப்படுத்த உதவும் அனைத்துப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
சன்னி லியோனுக்கு பஞ்சாபி உணவுகள் மற்றும் மீன் வகைகள் மீது கொள்ளை பிரியம். கீட்டோஜெனிக் டயட் முறைப்படி உணவில் கொழுப்பைச் சேர்த்துக்கொள்ளும் சன்னியின் உணவு பிளேட்டில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு அதிகம் இடம் இல்லையாம். உருளைக்கிழங்கு மிகவும் பிடித்த உணவு என்பதால் அதை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.
உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் தன்னம்பிக்கையாக இருப்பது நம்மை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் என்கிறார் பஞ்சாப்பை சேர்ந்த பாலிவுட் நாயகி சன்னி லியோன்.
கருத்துக்களேதுமில்லை