24 மணித்தியாலத்தில் 43 நோயாளர்கள் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 9529 ஐ எட்டியுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1542 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
24 மணித்தியாலத்தில் இங்கிலாந்தில் 28 நோயாளர்கள் உயிரிழந்தனர்.
லண்டனில் உள்ள பார்ட்ஸ் (Barts) மருத்துவமனையில் நான்கு பேரும், டார்பி (Derby) மற்றும் பேட்டன் (Burton) மருத்துவமனைகள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.
ஏற்கனவே வேறு நோயினால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 47 வயதான ஒருவரும் உயிரிழந்தார்.
ஏனையவர்கள் வயோதிபர்கள் என்று மருத்துவமனைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸினால் இதுவரையில் இங்கிலாந்து 414, ஸ்கொட்லாந்து 22 வேல்ஸ் 22, வட அயர்லாந்து 7 என்ற எண்ணிக்கையில் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
இங்கிலாந்தில் 7,973 பேரும் ஸ்கொட்லாந்தில் 719 பேரும் வேல்ஸில் 628 பேரும் வடஅயர்லாந்தில் 209 பேரும் நோய்வாய்ப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை