கொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்கள்!
பெரும்பாலான மக்கள் தங்களுக்கே உரிய பாணியில் பொழுதுபோக்கி கொண்டிருக்க, மறுகையில் உள்ள சிலர் 24 மணி நேரமும் கண்டமேனிக்கு கொரோனா சார்ந்த தகவல்களை தேடுவதும், கிடைக்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதுமாக தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றன. அம்மாதிரியான வழக்கத்தினை கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இக கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக்பாயிண்ட் அறிக்கையின்படி, கடந்த இரண்டு மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான டொமைன் பெயர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது. உலகளவில் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான களங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்களில், 3% க்கும் மேலான தளங்கள் மால்வேர்கள் என்றும் மற்றும் 5% சந்தேகத்திற்குரியவைகால என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஹேக்கர்கள் தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே கொரோனா வைரஸ் சார்ந்த தகவல்களை தேடும்போது நெட்டிசன்களுக்கு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஆன்லைனில் கொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்களின் பட்டியல் இதோ:
கொரோனா வைரஸ் ஆப்ஸ் (Coronavirus apps):
“காட்டுத்தீபோல் பரவும் இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி) போன்ற நம்பகமான மூலத்திலிருந்து எந்தவொரு ஆப்பும் வெளியாகவில்லை என்பது தான். கூகுள் பிளே ஸ்டோரில் அணுக கிடைக்கும் கோவிட்லாக் என்ற ஆப், பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ransomware-ஐ நிறுவுகிறது மற்றும் அவர்களின் ஸ்மார்ட்போன்களைத் திறக்க பிட்காயினில் $100 செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த விதமான கொரோனா வைரஸ் ஆப்பையும் பதிவிறக்க வேண்டாம்.
கொரோனா வைரஸ் இமெயில் (Coronavirus emails):
உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒரு மூலத்திலிருந்தும், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு மின்னஞ்சலையும் திறக்க வேண்டாம். காஸ்பர்ஸ்கியின் கூற்றுப்படி, பயனர்களின் ப்ரவுஸர் டேட்டா மற்றும் பிற முக்கிய தகவல்களை திருடும் நோக்கத்தின் கீழ் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்கள் என்கிற மாறுவேடத்தின் கீழ் மால்வேர்கள் நிறைந்த மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அனுப்புகிறார்கள்.
கொரோனா வைரஸ் ட்ராக்கர்ஸ் (Coronavirus trackers)
ரீசன் ஆய்வக (Reason Labs) அறிக்கையின்படி, பயனர்களின் பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் பயனர்களின் ப்ரவுஸர்களில் சேமிக்கப்பட்ட பிற விவரங்கள் போன்ற தகவல்களைத் திருட ஹேக்கர்கள் போலியான கொரோனா வைரஸ் டிராக்கர்களைப் பயன்படுத்துகின்றனர். ஒருவேளை நீங்கள் கொரோனா வைரஸ் சார்ந்த அப்டேட்களை பெற விரும்பினால் WHO வலைத்தளம், மைக்ரோசாப்டின் கொரோனா வைரஸ் டிராக்கர் அல்லது இந்திய அரசாங்கத்தின் வாட்ஸ்அப் சாட்போட் ஆகியவற்றை சோதிக்கலாம்.
கொரோனா வைரஸ் டெஸ்டிங் கிட்ஸ் (Coronavirus testing kits):
WHO, அரசு அல்லது ஒரு மருத்துவ அமைப்பு அங்கீகாரம் பெற்ற கிட் எதுவும் சந்தையில் தற்போது வரையிலாக கிடைக்காததால், ஆன்லைனில் கொரோனா வைரஸ் சோதனையை நிகழ்த்த உதவும் கருவிகளைத் தேட வேண்டாம். COVID-19 சோதனையை நிகழ்த்த போதுமான அளவு நேரமும் மற்றும் சரியான மருத்துவ மேற்பார்வையும் தேவைப்படுகிறது. மேகி நூடுல்ஸ் போல வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஏமாறுவதை யாராலும் தடுக்க முடியாதது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Coronavirus vaccine):
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி எதுவும் தற்போது வரை (இக்கட்டுரையை நான் எழுதும் நேரம் வரையிலாக) உருவாக்கப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை விற்பனை செய்வதாகக் கூறும் எந்தவொரு வலைத்தளமும் அல்லது போர்டலும் போலியானது தான் என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துக்களேதுமில்லை