இந்நிலையில் விஜய் அடுத்து ராஜமௌலியின் RRRபடத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தற்போது செய்தி பரவி வருகிறது. ராஜமௌலி இயக்கி வரும் இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் RRR உருவாகிறது. தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்வதற்காக விஜய்யை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூரோவா தகவல் எதுவும் வரவில்லை.
மாஸ்டர் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட விஜய் அடுத்து தனது 65வது படத்திற்காக எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் அவரிடம் கதை கூறியுள்ளனர். யாரை விஜய் தேர்ந்தெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கருத்துக்களேதுமில்லை