Secret Shortcuts : அடச்சே! இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

விண்டோஸ் 10 ஓஎஸ் – ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகும். யூஸர் இன்டர்பேஸ் என்று வரும்போது டன் கணக்கான ஸ்மார்ட் அம்சங்களை இது கொண்டுள்ளது. இருப்பினும் சில நேரங்களில் இதன் நூற்றுக்கணக்கான அம்சங்களை உடனுக்குடன் அணுகுவது மற்றும் தொடர்புகொள்வது என்பதும் சிக்கலான காரியமாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் தான் ஷார்ட்கட்ஸ் நமக்கு கை கொடுக்கிறது. ஒருவேளை உங்களுக்கு கர்சருடன் சண்டை போடுவது பிடிக்காது என்றால் இந்த ஷார்ட்கட் கீஸ்களை கற்றுவைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக எல்லா நேரங்களிலும் உங்களுக்கு பயன்படும் இந்த 21 ஷார்ட்கட் கீஸ்களை பற்றி தெரியாமல் லேப்டாப்பில் அல்லது கம்யூட்டரில் வேலை செய்வது என்பது கிட்டத்தட்ட – பங்கம்!

டெஸ்க்டாப் முதல் செட்டிங்ஸ் வரை:

samayam tamil

01. டெஸ்க்டாப் (Desktop): நீங்கள் விரைவாக உங்கள் டெஸ்க்டாப்பை அணுக விரும்பினால், குறிப்பிட்ட பயன்பாடுகளை மூடவோ அல்லது ஒரு செயல்முறையை விட்டு செல்லவோ விரும்பவில்லை என்றால் விண்டோஸ் கீ + D என்பதை ஐ அழுத்தவும். இது உங்களை நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பிற்கு அழைத்துச் செல்லும்.

02. லாக் ஸ்க்ரீன் (Lock Screen): விண்டோஸ் கீ + L அழுத்துவதன் மூலம் உங்கள் ஸ்க்ரீனை சட்டென்று லாக் செய்யலாம்.

03 ரன் (Run): ரன் டயலாக் பாக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதைக் கண்டுபிடிக்க சற்று கடினமாக இருக்கும். அந்நேரத்தில் விண்டோஸ் கீ + R என்பதை அழுத்தவும்.

04. மல்டி டாஸ்கிங் (Multi-tasking): ஒரே நேரத்தில் பல ப்ரோகிராம்களில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகினால், மற்றும் அவற்றுக்கிடையே மல்டி டாஸ்கிங் செய்ய விரும்பினால், விண்டோஸ் கீ + TAB என்பதை அழுத்தவும், இது ஓப்பன் ஆக உள்ள அனைத்து ப்ரோகிராம்களின் சிறுபடத்தையும் ஒரே பார்வையில் காண்பிக்கும்.

05. செட்டிங்ஸ் (Settings): நீங்கள் டக்கென்று செட்டிங்கஸ்-ஐ அணுக விரும்பினால், விண்டோஸ் கீ + I என்பதை அழுத்தினால் அது தோன்றும்.

எக்ஸிட் முதல் ஸ்க்ரீன் ஷார்ட் வரை:

samayam tamil

06. எக்ஸிட் (Exit): நீங்கள் தற்போது இருக்கும் ஒரு ப்ரோகிராமில் இருந்து வெளியேற விரும்பினால், Ctrl + F4 என்பதை அழுத்தவும், இது உங்களை அந்த ப்ரோகிராமில் இருந்து வெளியேற்றும்.

07. கொர்டானா (Cortana): விண்டோஸ் ஸ்மார்ட் அசிஸ்டென்ட்டை ஒரு நொடியில் அணுக விரும்பினால், விண்டோஸ் கீ + C என்பதை அழுத்தவும்

08. டாஸ்க் மேனேஜர் (Task Manager): உங்கள் கணினியை நிர்வகிப்பதற்கும் பதிலளிக்காத பயன்பாடுகளை மூடுவதற்கும் சிஸ்டம் மேனேஜர் மிக முக்கியமான கருவியாக செயல்படுகிறது. இதை அணுக Ctrl + shift + Esc என்பதை அழுத்தவும்.

09. (பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer): நீங்கள் ஒரு குறிப்பிட்ட பைலை திறக்க விரும்பினால் அல்லது சிலவற்றைத் தவிர்க்க விரும்பினால், அதற்கான ஆப் – பைல் எக்ஸ்ப்ளோரர் ஆகும். விண்டோஸ் கீ + E என்பதை அழுத்துவதன் மூலம் அதை அணுகலாம்.

10. ஸ்க்ரீன் ஷார்ட் (Screenshot):

உங்கள் திரையில் இருப்பதை நீங்கள் ஸ்க்ரீன் ஷார்ட் எடுக்க விரும்பினால் மற்றும் அதைச் சேமிக்க விரும்பினால், விண்டோஸ் கீ + PrtScn என்பதை அழுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம்.

மினிமைஸ் முதல் விர்ச்சுவல் டெஸ்க்டாப் வரை:

samayam tamil

11. ஸ்க்ரீனை மினிமைஸ் (Minimize) செய்ய Windows + Home என்பதை அழுத்தவும்.

12. விண்டோஸ் 10 இல் உள்ள கேம் பாரை (Game Bar) அடைய Windows Key + G என்பதை அழுத்தவும்.

13. தேடல்களை நிகழ்த்த (Search) Windows Key + S என்பதை அழுத்தவும்.

14. ஆக்சன் சென்டரை (Action Centre) அடைய Windows Key + A என்பதை அழுத்தவும்.

15. விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை (Virtual Desktop) உருவாக்க Windows Key + Ctrl + D என்பதை அழுத்தவும்.

ப்ரொஜெக்ட் ஸ்க்ரீன் முதல் அன்டூ வரை:

samayam tamil

16. ஸ்க்ரீனை ப்ரொஜெக்ட் (Project Screen) செய்ய Windows Key + P என்பதை அழுத்தவும்.

17. குறிப்பிட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை (Virtual Desktop) மூட Windows Key + Ctrl + F4 என்பதை அழுத்தவும்.

18. குறிப்பிட்ட கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை கட் (Cut) செய்ய Ctrl + X என்பதை அழுத்தவும்

19. குறிப்பிட்ட கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை காப்பி (Copy) செய்ய Ctrl + C என்பதை அழுத்தவும்

20. கட் அல்லது காப்பி செய்த கோப்புகளை, புகைப்படத்தை அல்லது டெக்ஸ்ட்டை பேஸ்ட் (Paste) செய்ய Ctrl + V என்பதை அழுத்தவும்

21. நீங்கள் கணினியில் செய்த ஏதேனும் ஒரு ஆக்ஷனை திரும்பி பெற (அதாவது Undo செய்ய) Ctrl + Z என்பதை அழுத்தவும்.

இதேபோன்ற பயனுள்ள டெக் டிப்ஸ் மற்றும் லேட்டஸ்ட் மொபைல் அப்டேட்ஸ்களுக்கு சமயம் தமிழ் பக்கத்தின் டெக் பிரிவை பின்பற்றவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.