யாரும் செய்யாததை செய்த அசுரன் ஹீரோயின்! கொரோனா பரிதாபங்கள்

கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் வேளையில் தனித்திருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. அதே வேளையில் எங்கும் அதிகமாக மக்கள் கூட்டம் வருவதை தடை செய்துள்ளனர்.

அனைத்து தொழில்களும் இந்த கொரோனா வைரஸால் நின்று போயுள்ளன. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

சினிமா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மலையாள சினிமாவின் நடிகையான மஞ்சு வாரியார் தன் ஒப்பனை கலைஞர் ஒருவர் மூலமாக திருநங்கைகள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருவதை அறிந்து ரூ 35 ஆயிரம் கொடுத்து நிதி உதவி செய்துள்ளாராம்.

இதனால் திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சு சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.