கொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா?… இந்த யோகா பண்ணுங்க… ரிலாக்ஸ் ஆயிடுவீங்க…

யோகாசனம் செய்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எப்போதும் உறூதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல, எந்த நோயையும் உங்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுகின்ற ஆற்றலும் வலிமையும் யோகப் பயிற்சிக்கு உண்டு. அதனால் தான் காலங்காலமாக சித்தர்களும் நம்முடைய பாரம்பரிய மருத்துவமும் யோகக்கலையைப் போற்றுகின்றனர். சித்தர்கள் முழு ஆரோக்கியத்தோடு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்கான மிக முக்கியமான காரணம் இந்த யோகக்கலை தான். ஆனால் நம் சமூகத்தில் இளம் வயதினருக்கே மாரடைப்பு சாதாரணமாக வருகிறது. அதிலும் இப்போதுள்ள பதட்டமான சூழலில் யாருக்கு என்ன நடக்கும் என்பதே தெரியாமல் போய்விட்டது. அந்த மனநிலையில் இருந்து வெளியேறி மனதை தைரியப்படுத்தவுமு் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவுமு் இந்த ஐந்து யோகாசனப் பயிற்சிகளை காலையும் மாலையும் செய்து வாருங்கள். நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

​இதய ஆரோக்கியம்

samayam tamil

கொரோனா என்னும் கொடிய தொற்று நம்மை விரட்டிக் கொண்டிருக்கிறது தான். அதை எதிர் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்காகப் பதட்டப்படுவது தீர்வல்ல. நிதானமாக மனதை இலகுவாக வைத்துக் கொண்டு தான், எதையும் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய இதயத்தை நன்றாக பலப்படுத்த வேண்டும். நமது உடலில் உள்ள கை கால்கள் மற்ற உடல் உறுப்புக்கள் கூட நாம் தூங்கும் நேரத்தில் வேலை செய்வதில்லை. ஆனால் இதயம் அப்படியல்ல, நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் அது ஓய்வு எடுப்பதில்லை. தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும். நம் உடல் முழுக்க இரத்தத்தைச் சீராக அனைத்து இடத்திற்கும் அனுப்புவது போன்ற நம் உயிர்வாழ்வதற்கான முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. நம் இதயத்தைப் பாதுகாப்பது மிக மிக அவசியமானது. இன்றைய எந்திர வாழ்க்கை, தவறான உணவுப் பழக்கம், அதீத மன உளைச்சல் போன்ற விஷயங்களால் நமது இதயம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற இதய சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க யோகா பெரிதும் உதவுகிறது.

​யோகாசனம் செய்யும் அற்புதம்

samayam tamil

மக்கள் தினமும் தவறாது யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் மன அழுத்தம், பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளிருந்து விடுபட முடியும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நம் இதயம் பாதிப்புக்கு உள்ளாவது குறையும். பதட்டம், உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். எனவே மக்கள் அனைவரும் தினமும் யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டாம் எனப் பரிந்துரை செய்கின்றனர். யோகா தினமும் செய்யலாம், ஆனால் எப்படிச் செய்வது? முறையாகத் தெரிந்து கொள்ளாமல் தவறாகச் செய்துவிட்டால், தேவையில்லாத பக்க விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்குமா என பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி சிரமம் எதுவுமின்றி, இதயத்திற்கான ஐந்து முக்கியமான ஆசனங்களை இப்பொழுது சொல்லித் தருகிறோம். அதை தினமும் செய்து வாருங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும்.

​பந்தாசனம்

samayam tamil

முதலில் தரையில் நேராகப் படுத்துக் கொள்ள வேண்டும் பின்பு உங்களது இரு கால் முட்டிகளையும் தூக்கிக் கொள்ள வேண்டும் அதோடு உங்கள் இடுப்பையும் தூக்கிக் கொள்ள வேண்டும். உங்களது கைகள் தரையில் நேராக இருக்க வேண்டும். பின்பு உங்கள் பாதங்களைத் தரையில் வைத்து அழுத்தி மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும் மெதுவாக உங்கள் இடுப்பை மெதுவாகத் தூக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு உங்கள் கைகள் உங்கள் தோள்களைத் தரையில் வைத்து அழுத்தி உங்கள் நெஞ்சு பகுதியை நேராகத் தூக்கிக் கொள்ள வேண்டும் உங்கள் கால்கள் உங்கள் மற்றும் புட்டத்தின் உதவியில் உங்கள் இடுப்பை இன்னும் சற்று உயரமாகத் தூக்க வேண்டும். அதே அமைப்பில் 4 முதல் 8 முறை மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும் பின்பு பழைய அமைப்பிற்குத் திரும்பி விட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஐந்து ஆசனங்களைத் தினமும் செய்து வந்தால் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மைச் சுலபமாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

​அர்த்த மச்சேந்திராசனம்

samayam tamil

முதலில் அமர்ந்து கொண்டு உங்களது கால்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு உங்கள் இரு முட்டிகளையும் வளைத்து வலது முட்டியைக் கீழே இறக்கி விட வேண்டும். பின்பு உங்களது வலது பாதத்தை உங்களது இடது பக்கமுள்ள இடுப்புக்கு நேரே கொண்டு வர வேண்டும் பின்பு உங்களது கணுக்காலை உங்களது வலது காலுக்கு அருகில் கொண்டு வர வேண்டும் பின்பு உங்கள் இரு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும் அதன் பின்னர் உங்களை கைகளை உயர்த்தி உங்கள் இடுப்பிற்குப் பின்னால் கொண்டு சென்று மேட்டில் படுமாறு வைக்க வேண்டும்.

அதன்பின்னர் உங்களது வலது கையை மேலே உயர்த்தி பின்பு அதை இறக்கி உங்களது இடது தொடையில் வைக்க வேண்டும். இடது பக்கம் பார்க்குமாறு இருக்க வேண்டும். அடுத்து உங்களது கழுத்து இடுப்பு மற்றும் தோள்பட்டையை இடது பக்கம் திருப்ப வேண்டும் பின்பு உங்களது முதுகுத் தண்டை லேசாக உயர்த்தி மூச்சு விட வேண்டும். இதே அமைப்பில் சிறிது நொடிகள் இருக்க வேண்டும் பின்பு நாம் ஆரம்பித்த அமைப்பிற்குத் திரும்பி விட வேண்டும். இதேபோல் மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.

​குமுக்காசனம்

samayam tamil

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு உங்களது கால் முட்டியை வளைக்க வேண்டும். பின்பு உங்களது வலது முட்டி உங்கள் இடது முட்டையோடு ஒட்டும் அளவு உங்கள் இரு கால்களையும் வைத்துக்கொள்ளவேண்டும் முடிந்தவரை உங்கள் கால்கள் உங்கள் புட்டத்தில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக உங்களது அது கையை பின்பக்கமாகக் கொண்டு சென்று உங்களது முழங்கையை வளைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து உங்கள் தோள்களைத் தொடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

அடுத்து உங்களது வலது கையை தூக்கி வளைத்து உங்கள் இரு கைகளில் உள்ள விரல்களையும் இறுக்கிக் கற்றுக்கொள்ள வேண்டும் இதே போல் 30 நொடிகள் செய்ய வேண்டும் அதன் பின்னர் மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.

​உத்திட்ட திரிகோணாசனம்

samayam tamil

முதலில் மேட்டிலிருந்து எழுந்து நின்று நேராக நின்று கொள்ள வேண்டும். பின்பு உங்கள் இரண்டு கால்களையும் லேசாக அகற்றிக் கொள்ள வேண்டும் இப்பொழுது உங்களது இடது பாதத்தைச் சற்று வெளியேவும் உங்களது வலது பாதத்தைச் சற்று உள்ளேயும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக உங்களது முகத்தை நேராக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு மூச்சை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும் உங்களது கைகளை மெதுவாக மேலே தூக்கி இரண்டு பக்கமும் விரித்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது உங்களது உடலின் மேல்பகுதி டீ போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக மூச்சை வெளியே இழுத்து உங்களது இடது கையை கீழே அதாவது மூட்டு மற்றும் கணுக்கால் கீழே கொண்டுவர வேண்டும். இப்பொழுது உங்கள் உடல் பகுதியை முடிந்த வரை வளைத்து உங்களது வலது கையை தலைக்கு மேல் தூக்க வேண்டும் உங்களது விரல்நுனி மேற்கூரையை நோக்கி இருக்க வேண்டும்.

அடுத்து உங்களது உடல் தரைக்கு மேலே நேராக இருக்க வேண்டும் உங்கள் கழுத்து உங்கள் உடலுக்கு நேராக இருக்க வேண்டும். அடுத்து உங்களது வலது கையை பார்த்து இரண்டு அல்லது மூன்று முறை மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும் அதேபோன்று, மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

​பச்சி மோட்டானாசனம்

samayam tamil

முதலில் உங்களது மேட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும் பின்பு உங்கள் இரண்டு கால்களையும் நேராக நீட்டிக் கொள்ள வேண்டும் அதன்பின் உங்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்க வேண்டும் உங்களது விரல்நுனிகள் மேற்கூரையை நோக்கி இருத்தல் அவசியம் பிறகு மூச்சை நன்றாக இழுக்க வேண்டும்.

பின்பு மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும் அதே நேரத்தில் நீங்கள் குனிந்து உங்கள் கைகளை வளைக்காமல் அப்படியே உங்கள் பாதங்களைத் தொட வேண்டும் இதைச் செய்யும் பொழுது உங்களது வயிறு பகுதி உங்கள் கைகளில் இருக்க வேண்டும் உங்களுக்குப் பகுதி உங்கள் இரு மூட்டுகளுக்கும் நடுவே இருக்கும். இதே அமைப்பில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். பின்பு நீங்கள் முதலிலிருந்த அமைப்பிற்குத் திரும்பி விட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.