பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். அத்துடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில் மட்டும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதாக அதிகாரிகள் சிலர் காட்டிக் கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களையும் வீட்டில் இருக்கும்படி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.இங்குள்ள பெரும்பாலான மக்கள் இன மதம் கடந்து பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்று ஊரடங்கு சட்டத்தை மீறாமல் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மட்டும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதாக காட்டிக் கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். என்றால் இப்பொழுது வரை ஊரடங்கு சட்டத்தை மீறியுள்ளதாக சுமார் 8000 பேர் கைது செய்யகப்பட்டுள்ளனர்.
எனவே தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாம் அனைவரும் வீட்டில் தங்கியிருப்பது கடமை. ஆனால் சில முஸ்லிம் மேதாவிகள் இனத்தை இழுத்து முஸ்லிம்களே வீட்டில் இருங்கள் என சொல்வது மிகப்பெரிய தவறாகும்.சிங்கள மக்கள் யாரும் சிங்கள மக்களே வீட்டில் இருங்கள் என்றோ தமிழ் மக்கள் தமிழ் மக்களே என விழித்து சொல்வதை நாம் காணவில்லை. ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் புத்திமதி சொல்ல வேண்டும்.இதனை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.தற்போது கொரோனா பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகும். இன்று வரை உலகில் இந்நோயால் இறந்தோர் 98 வீதம் முஸ்லிம் அல்லாதவர்கள்.எனவே தான் அனைத்து இலங்கையரும் வீட்டில் இருப்போம். முடிந்தளவு அரசின் உத்தரவுகளை பின்பற்றுவோம்.
இன்று முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் இந்த கொனோரா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் அரசின் கட்டளை ஏற்று நடக்கவேண்டிய ஒரு விஷயத்தை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் எங்களுக்கு கிடைத்த தகவல்களில் சில அதிகாரிகள் முஸ்லிம்களின் பிரதேசத்தில் மாத்திரம் மட்டும் நடமாடுவதாக எங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கின்றது இவர்கள் முஸ்லிம்கள் இந்த சட்டங்களை மீறுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் முஸ்லிம்கள் தொழுகை விடயத்தில் தங்கள் வீடுகளில் இருந்து தனித் தனியாக தொழுது கொள்ளவேண்டும். இந்த வைரஸ் நோய் காரணமாக நாங்கள் எங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும். இதனை மீறி பலர் கூட்டாக தொழுகையை மேற்கொண்டு வருவது சட்டதிட்டங்களை மீறும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளில் முஸ்லிம்கள் மாத்திரம் ஈடுபடவில்லை சில மாகாணத்தில் ஏனைய மதத்தவர்களும் மீறியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி கைதுசெய்யப்பட்டதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம் எனவே அனைத்து மக்களும் ஒவ்வொரு உயிரினதும் பெறுமதி அறிந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்
கருத்துக்களேதுமில்லை