சமுர்தி கொடுப்பணவிற்கும் சமுர்தி நிவாரனத்திற்கும் ஆறு மணித்தியாலமாக காத்திருந்து வீடு திரும்பிய பயனாளிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய்காரனமாக சமுர்தி பயனாளிகளுக்கு குறித்த பிரிவிற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக சமுர்தி கொடுப்பணவு வழங்குமாறும் சமுர்தி நிவாரனமானது சமுர் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது
அந்தவகையில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல் 319ஜீ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சமுர்தி பயனாளிகளுக்கு சமுர்தி கொடுப்பனவானது 1900ருபாவும் சமுர்தி நிவாரன பொருட்களும் வழங்குவதாக பயனாளிகலை காலை வேலையில் வருமாறு சமுர்தி உத்தியோகத்தரினால் அறிவிக்கப்பட்டதாகவும் காலை எட்டுமணியில் இருந்து மதியம் 2.30மணி வரை குறித்த பயனாளிகள் கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தின் சுமார் ஆறு மணித்தியாலங்கள் காந்திருந்த போது இருதி வரை இரண்டு உத்தியோகத்தர்களும் சமுகம்தரவில்லையென பயனாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
நாம் காலையில் இருந்து எமக்கு வழங்க உள்ள கொடுப்பணவை பெற்றுகொள்ளவந்தோம் ஆனால் எமக்கு ஆறு மணி நேரம் காத்திருந்தும் இருதிவரை எமக்கு சமுர்தி கொடுப்பணவும் சமுர்தி நிவாரனமும் கிடைக்கவில்லை நாம் காலை உணவு கூட உண்ணாமல் வந்தோம் ஆனால் இந்த உத்தியோகத்தர் இந்த வாரமே எங்களை ஏமாற்றி வருகின்றனர்  குறித்த கிராம உத்தியோகத்தருக்கும் சமுர்தி உத்தியோகத்தருக்கும் தொலைபேசி முலம் தொடர்பு கொட்டால் கினிகத்தேனையில் இருப்பதாக பொய் கூறுகிறார்கள்
எமக்கு அரசாங்கம் வழங்குகின்ற கொடுப்பணவைதான் நாம் கேட்கிறோம் ஏன் எங்களை இப்படி ஏமாற்றுகிறார்கள் எனவே இது போன்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் தகுந்த நஞவடிக்கை எடுக்கபட வேண்டுமென சமுர்தி பயனாளிகள் கோறிக்கை விடுத்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.