மட்டக்களப்பு கிளினிக் நோயாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளினிக் நோயாளர்கள் 0653 133 330 மற்றும் 0653 133 331 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டாக்டர். திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என அவர் அறிக்கையினூடாக அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.