கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!
இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்ள்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முழுமையாகக் குணமடைந்திருந்தாலும் சமூக விலகலைக் கடைபிடிக்க போகிறேன். கொரோனா வைரஸ் மிகவும் கொடுமையாக இருந்தது. என்னை சுற்றியும் கடுமையான சூழ்நிலை நிலவியது.
இருப்பினும் மருத்துவ பணியாளர்கள், திறமைமிகுந்த நபர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் நான் மீண்டு வந்துள்ளேன். அவர்களுக்கு எனது நன்றிகள்” என அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை