கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!

உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது.

கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதுவரை மொத்தமாக அங்கு 9 ஆயிரத்து 731 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அதில், 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளநிலையில் மொத்தமாக 7 ஆயிரத்து 886 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 1736 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கனடாவின் கியூபெக் மாகாணமே அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை மொத்தமாக 4 ஆயிரத்து 611 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு உள்ள நிலையில் அங்கு 2 ஆயிரத்து 392 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 66 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.