இலங்கையில் நான்காவது மரணம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளார்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 58 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும், நிமோனியா காய்ச்சல் அதிகரித்தாலேயே இந்நிலைமை ஏற்பட்டது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கையில் 151 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இதுவரையில் 21 பேர் குணமடைந்துள்ளனர். 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
251 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை