இடைவிடாது இளையதளபதி விஜய்யின் மாஸான ஹிட்ஸ்! தளபதி ரசிகர்கள் கொண்டாட ரெடியா
கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9 ல் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக இருந்தது.
ஆனால் உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதால் இந்தியா முழுக்க 21 நாட்கள் மக்களின் உணவுப்பொருள், மருத்துவ தேவைகள் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளது.
சினிமா தொழிலும் முற்றிலும் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
டிவி சானலிலும் பழைய சீரியல்கள், படங்கள் தற்போது தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அதே வேளையில் தற்போது சன் தொலைக்காட்சியில் 1 மணி நேரம் விஜய்யின் ஹிட் பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பவுள்ளதாம்.
இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை