கடைசிவரை ரகுவரன் கூட நடிக்காத கமல்.. வேலில போற ஓணானை ஏன் வேட்டிக்குள்ள விடனும் என பயம்
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு வாழும் நடிகர்களில் கலைநயம் அதிகம் மிக்க நடிகராக இருப்பவர் தான் கமலஹாசன். கொடுக்கும் கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தில் வாழ்வார்.
அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கடி தந்த நடிகர் என்றால் அது ரகுவரன் தான். ரகுவரன் நடிப்பில் அசுரன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் என அப்போதே கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டவர்.
அதன் காரணமாகவே கமலஹாசன் ரகுவரன் உடன் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். ரகுவரன் நடித்த உல்லாசம் படத்தில் கமலஹாசன் ஒரு பாட்டு பாடி இருப்பாரே தவிர மற்றபடி எந்த ஒரு தொடர்பும் இருவருக்கும் இல்லை.
இருவருக்குள்ளும் சின்ன ஈகோ இருந்ததாகவும் அப்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப் பட்டது.
அது மட்டுமல்லாமல் கமலஹாசன் நடிக்கும் படங்களில் அவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் உள்ள படி அமைத்துக் கொள்வாராம். இதுவரை கமல் நடித்த படங்களில் அவரின் நடிப்பை மட்டும் தான் அதிகம் பேசி இருக்கிறோம் என்பதே இதற்கு சான்று.
குருதிப்புனல் படத்தில் கூட நாசர் கதாபாத்திரத்திற்கு முதலில் ரகுவரன் தான் பொருத்தமாக இருப்பார் என டைரக்டர் விரும்பினாராம். ஆனால் நாசர் முஸ்லிம் என்பதால் டெரரிஸ்ட் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என இயக்குனருக்கு சமாதானம் சொல்லி விட்டாராம் கமல்.
உண்மையிலேயே கமலை விட ரகுவரன் நடிப்பில் அசுரன் தான். அதற்கு அவருடைய நடிப்பில் சில எடுத்துக்காட்டுகளாக பாட்ஷா, ரட்சகன் போன்ற படங்களை கூறலாம். இதன் காரணமாகவே கமல் கடைசிவரை ரகுவரனை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம்.
அதுமட்டுமல்லாமல் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதே பெரிதும் தவிர்த்து விட்டார்களாம். யார் என்ன செய்தாலும் ரகுவரன் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிவு செய்துவிட்டார் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
கருத்துக்களேதுமில்லை