வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க…
மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கிறோம். தற்போது பலர் வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தை பற்கள் போன்ற பல பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கின்றனர். இதற்கு மோசமான வாய் பராமரிப்பு மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான் முக்கிய காரணம்.
என்ன தான் கடைகளில் வாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பல்வேறு டூத் பேஸ்டுகள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல் நிறைந்திருப்பதால், சில சமயங்ளில் அவை பற்களுக்கு தீங்கை விளைவித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் டூத் பேஸ்ட் என்பதில்லை. வெறும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி தான். இவற்றில் உள்ள உட்பொருட்கள் தான் வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன.
தற்போது இந்த குச்சிகள் நமக்கு கிடைக்காவிட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் வாயில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அன்றாடம் பராமரிப்பு கொடுத்து வந்தால், நிச்சயம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாயின் ஆரோக்கியத்தை மேம்படும். இப்போது வாயில் உள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் மௌத் வாஷை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்றும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா
* உப்பு
* ஹைட்ரஜன் பெராக்ஸைடு
* டூத் பிக்ஸ்
* டூத் பிரஷ்
செய்முறை #1
ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2
பின்பு வெதுவெதுப்பான நீரை ஒரு கப்பில் எடுத்து, அதில் டூத் பிரஸை 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
செய்முறை #3
பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து எடுத்து, அந்த கலவையால் பற்களை நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும்.
செய்முறை #4
பின் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வாயைக் கொப்பளித்து துப்ப வேண்டும்.
செய்முறை #5
பிறகு டூத் பிக் கொண்டு பற்களின் பின் பிடிந்துள்ள ப்ளேக்கை மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவ வேண்டும்.
டிப்ஸ்
உங்கள் வாயில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ளதை வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், பற்கள் மற்றும் வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை