பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 684 மரணங்கள் – பலி எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்தது…
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்துதுள்ளது. இது சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை முந்தியுள்ளதாக THE SUN செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் இன்று வரை 3,322 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் இவை போலியான எண்ணிக்கை எனவும் அரசாங்கம் நிர்ணயிக்கும் எண்ணிக்கை எனவும் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. பிரிட்டனில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 38,168 ஆக உயர்ந்துள்ளன – நேற்றைய மொத்தம் 33,718 இலிருந்து 4,450 அதிகரித்துள்ளது.
கோவிட் -19 க்கு நேர் மறை பாரஜசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 17 சதவீதம் அதிகரித்து வருகிறது – இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பரிசோதனை எண்ணிக்கை மிகக் குறைவானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து மஹாராணியார் ஒரு சிறப்பு ஒளிபரப்பை, இன்று பதிவு செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது, இது நாளை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. ஏனெனில் பிரிட்டன் கொரோனா வைரஸ் நெருக்கடியில் ஆழமாக மூழ்கியுள்ளது.
எனினும் பிரதமர் பொரிஸ்ஜோன்சனின் ஆலோசகரின் கூற்றுப்படி, மே மாத இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னர் பிரித்தானியாவின் முடக்கம் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
கருத்துக்களேதுமில்லை