விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு மாஸ் பதில் கொடுத்த தல ரசிகர்..
தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் இடையே தான் வசூல் ரீதியாக போட்டிகள் அதிகரித்து வருகிறது. படத்திற்கு படம் இருவரின் வசூல் சாதனைகள் மற்ற நடிகர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்கு வியக்க வைக்கிறது.
என்னதான் தல தளபதி ரசிகர்கள் இணையதளங்களில் அடித்துக் கொண்டாலும் ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள்.
அந்த வகையில் தல அஜித்தின் தீவிர ரசிகை ஆர்த்தி தளபதி விஜய்யை பற்றி கூறிய பதில் தளபதி ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவில் பொழுதை கழிக்க நடிகைகள் அனைவரும் இணையதளங்களில் ரசிகர்களுடன் பேச முடிவெடுத்து விட்டார்கள் போல. ஆளாளுக்கு இணையதளங்களில் லைவ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி ட்விட்டர் பக்கத்தில் தன்னுடன் ரசிகர்கள் கலந்துரையாடலாம் என அறிவித்து இருந்தார். அதில் தளபதி விஜய் பற்றி கூறுமாறு விஜய் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு ஆர்த்தி தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை என பதிலளித்தார். இது தளபதி ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை