கொரோனாவுக்கு நிவாரண நிதி வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

கொரோனா வைரஸ் நோய் உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுக்க இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணில்லை 10 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டிவிட்டது. இந்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மத்திய அரசும், தமிழக அரசும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அனைவரிடமும் நிவாரண நிதியை நாடியுள்ளது.

சினிமா பிரபலங்கள், பெரிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் அதற்கு நிதி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தமிழக முதலமைச்சர் நிதிக்கு ரூ 49 ஆயிரத்தை வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.