பிரபல நடிகர் ஷாருக்கான் ரூ 45 கோடி கொடுத்தாரா? வைரலாக பரவிய செய்தி – சதி உண்மை அம்பலம்
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஷாருக்கான். அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. சமூக வலைதளங்களில் தற்போது அவரை பற்றிய பேச்சு தான் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக அவர் பாகிஸ்தானுக்கு ரூ 45 கோடி வழங்கியதாக அண்மையில் தனியார் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கூறியிருந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
ஒரு பக்கம் போலி செய்திகளை பரப்புவோர், மறுபக்கம் ஷாருக்கானுக்கு எதிரான ஊடக ஆர்மி என அவர் மீதான அவதூறுகள் தொடர, குற்றச்சாட்டும் எழுந்தன.
இந்நிலையில் அந்த வீடியோ 2017 ல் எடுக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பாகிஸ்தானி எண்ணெய் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 219 பலியானதை ஒட்டி ஷாருக்கான் ரூ 45 கோடி வழங்கியதாக சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் இந்த செய்தி வெறும் வதந்தி என கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை