அஜித் தவறவிட்ட வாய்ப்பு.. ஒரு சிறு நடிகர் நடித்து சூப்பர் ஹிட்.. இதுக்கு பேர்தான் ஜாக்பாட் அடிக்கிறது
தல அஜித் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக வலம் வருகிறார். சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளிவரும் படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.
தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் அஜீத் கொரானா பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னை வர முடியாமல் ஹைதராபாத்தில் தங்கி விட்டாராம் தல அஜித்.
இந்நிலையில் தல அஜித் பற்றிய முக்கியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அஜித் நிறைய மெகா ஹிட் படங்களில் நடிக்க தவறியுள்ளார். அதை மற்ற நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் உருவான திரைப்படம் தான் கோ. தல அஜீத்துக்காக கே வி ஆனந்த் எழுதப்பட்ட கோ படம் கால்ஷீட் பிரச்சனையால் கைவிடப்பட்டது.
அதன்பிறகு இந்த கதை நடிகர் சிம்புவை வைத்து தொடங்க இருந்த நிலையில் சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்ற காரணத்தைக் கூறி தயாரிப்பாளர் நிராகரித்து விட்டார்கள்.
அதன் பிறகுதான் ஒரு வழியாக இந்த கதையின் ஜீவாவிடம் சென்றது. அதுவரை சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த ஜீவாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் கோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
கருத்துக்களேதுமில்லை