தல அஜித்துக்கு ரொம்ப பிடித்த விஜய் படம்.. தளபதி வசூல் நாயகனாக மாறியதே இந்த படத்தில்தான்

தமிழ் சினிமாவில் தற்போது இரு பெரும் தூண்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவரும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளனர். இவர்களின் பட வெளியீடு திருவிழாவைப் போல காட்சியளிக்கும்.

இந்த வருடத்தில் தல நடிப்பில் வலிமையும் விஜய் நடிப்பில் மாஸ்டர் படமும் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறது. சமீபகாலமாக தளபதி விஜய் ஓபன் ஆக அனைத்தையும் பேசி வருகிறார்.
அந்த வகையில் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என குறிப்பிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதை அவர் அந்த மேடையில் பதிவு செய்தார். ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அப்படி கூறினார் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதேபோல் தல அஜித் தற்போது தான் பேட்டிகள் எதுவும் கொடுக்காமல் வழங்கியுள்ளார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இசை வெளியீட்டு விழா மற்றும் பேட்டிகள் ஆகியவை தல அஜீத்தும் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் ஒரு பேட்டியில் தல அஜித்துக்கு பிடித்த விஜய் படம் என்ன என கேட்டபோது காதலுக்கு மரியாதை என குறிப்பிட்டுள்ளார். அந்த படம் அஜீத்தின் மனதிற்கு மிக நெருக்கமான படம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் கதாநாயகியாக தல அஜித் மனைவி ஷாலினி தான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.